ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

அம்மா அப்பா சண்டை

அம்மா
பாடுபட்டுத் தேடி பணத்தைப் புதைத்து வைத்த
கேடுகேட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டு
ஆவிதான் போயின பின் யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்த பணம்

அப்பா
ஆனமுதலில் அதிகம் செலவானால்
மானமழிந்து மதிகெட்டு வாழ்விழந்து
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாய் நாடு

இலக்கியமாய் இல்லறச்சண்டை
துலக்கிய துக்கமும் சுகமென வாழ்ந்த
கலக்கமின்றி மற்றவர்க்கென கொண்ட
இலக்கு அன்றோ அந்த வாழ்கை

கருத்துகள் இல்லை: